Sunday, May 19, 2013

பி.இ. நேரடி இரண்டாம் ஆண்டு விண்ணப்பம்


பி.இ. நேரடி இரண்டாம் ஆண்டு விண்ணப்பம்



2013-2014-ஆம் கல்வியாண்டில் தமிழ்நாட்டிலுள்ள அரசு / அரசு உதவி பெறும் / சுயநிதி / அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளில் நேரடி இரண்டாமாண்டு பொறியியல் பட்டப்படிப்பு (B.E. / B.Tech.) சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவங்கள் கீழ்க்காணும் பொறியியல் கல்லூரி / பாலிடெக்னிக் கல்லூரிகளில் 21.5.2013 முதல் 12.6.2013 முடிய கல்லூரி வேலை நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை வழங்கப்படும்.

1.
அரியலூர்: யுனிவர்சிட்டி காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், அரியலூர் 621713

2.
சென்னை: தொழில் நுட்பக் கல்வி இயக்ககம், சென்னை 600025

3.
அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி, புரசைவாக்கம், சென்னை 600012

4.
கோயம்புத்தூர்: அரசினர் பொறியியற் கல்லூரி, கோயம்புத்தூர் 641013

5.
கோயம்புத்தூர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, கோயம்புத்தூர் 641014

6.
கடலூர்: முத்தையா பாலிடெக்னிக் கல்லூரி, அண்ணாமலை நகர் 608002

7.
தருமபுரி: தருமபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலை பாலிடெக்னிக் கல்லூரி, பாலக்கோடு 636808. - உள்ளிட்ட 34 கல்லூரிகளில் பெற்றுக்கொள்ளலாம்.

அனைத்து கல்லூரியின் விவரங்கள் இங்கே காணலாம்.

விண்ணப்பப் படிவங்களை நேரடியாக பெற விரும்புவோர் பிற இனத்தவர் ரூ.300/-க்கான கேட்பு வரைவோலையினை (Demand Draft 19.5.2013-க்கு பின் பெறப்பட்ட வகையில்) "The Secretary, Second year B.E. / B.Tech. Degree Admissions 2013, Alagappa Chettiar College of Engineering and Technology, Karaikudi – 630 004" என்ற பெயரில் காரைக்குடியில் காசாக்கும் வகையில் (Payable at Karaikudi) எடுத்து விண்ணப்பங்களை மேற்காணும் விற்பனை மையங்களில் பெற்றுக் கொள்ளலாம்.

தமிழ்நாட்டைச் சார்ந்த பட்டியல் இனத்தவர் (அருந்ததியர்), பட்டியல் / பழங்குடி (SCA/SC/ST) இனத்தவர், விண்ணப்பத்தினை இலவசமாக பெற்றுக் கொள்ள, சான்றிடப்பட்ட சாதிச் சான்றிதழின் நகலை (Attested Xerox copy of SCA/SC/ST Community Certificate) ஒப்படைத்து விண்ணப்பத்தினை மேற்காணும் விற்பனை மையங்களில் பெற்றுக் கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் “The Secretary, Second year B.E. / B.Tech. Degree Admissions 2013, ACCET, Karaikudi – 630 004” என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவேண்டும். 

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் - 12.06.2013 மாலை 5:00 மணி.

நேரடி இரண்டாமாண்டு பொறியியல் கல்லூரி சேர்க்கைக்கான கலந்தாய்வு, ஜூன் 2013 கடைசி வாரத்தில் "அழகப்ப செட்டியார் பொறியியற் கல்லூரி, காரைக்குடியில்" நடைபெறும். 

இதற்கான அழைப்புக் கடிதம் (Counselling call letter) உரியவர்கட்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும் என்று தொழில் நுட்பக் கல்வி ஆணையர் தெரிவித்துள்ளார்.


Sunday, March 3, 2013

+2 தேர்வுகள்


+2 தேர்வுகள் ஆரம்பித்துவிட்டது, 
பெற்றோர்களே உங்கள் பங்கு முக்கியம்.



குழந்தைகளின் பயத்தைப் போக்கணும்
கவலைப்படாதே, நாங்கள் இருக்கிறோம். உலகம் பெரியது. படிப்பும், பரீட்சையும் அதில் ஒரு அங்கம். அதனால் பதற்றம் அடையாதேன்னு ஆறுதல் வார்த்தைகள் சொல்லணும். குழந்தைகள் புரிஞ்சுக்குவாங்க. அப்பவே பாதி வெற்றி கிடைச்ச மாதிரிதான்.

தொந்தரவு வேண்டாம்
தொந்தரவு ஏதுமின்றி அமைதியான சூழ்நிலை இருந்தாலே போதும். அதுவே வெற்றிக்கு வழி. சிந்தனையும் செயலும் ஒன்றாக இருப்பதற்கு தனிமை அவசியம். அந்த வாய்ப்பை உருவாக்கி கொடுங்கள்.

உடன் இருங்கள்
வேலை நிமித்தம் வெளியூரில் இருந்தால் தவிர்த்து விட்டு , குழந்தையின் அருகாமையில் இருப்பது அவசியம். பெற்றோர்கள் நம்முடன் இருக்கிறார்கள் என்பதே பாதுகாப்பு உணர்வை கொடுக்கும்.

எளிய உணவு
பொறித்த உணவுகளைத்தவிர்த்து, எளிதில் செரிக்கும் சைவ உணவுகளை தரவேண்டும். நொறுக்கு தீனி வேண்டாம். காய் கறிகள், பழங்கள் கொடுக்க வேண்டும். தாரளமாக நீர் அருந்துவது நல்லது.

இரவில் நல்ல ஓய்வு எடுத்த பின்னர், அமைதியாக, தன்னம்பிக்கையோடு தேர்வுகளை எதிர்கொண்டால் வெற்றி நிச்சயம்.
வாழ்த்துக்கள்.


பிளஸ் 2 தேர்வு அட்டவணை

தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1.15க்கு முடிகிறது.

மார்ச் 1        மொழித்தாள் 1
மார்ச் 4   மொழித்தாள் 2
மார்ச் 6   ஆங்கிலம் 1
மார்ச் 7   ஆங்கிலம் 2
மார்ச் 11   இயற்பியல், பொருளியல்
மார்ச் 14  கணக்கு, விலங்கியல், நுண்ணுயிரியல், சத்துணவு
மார்ச் 15  வணிகவியல், மனையியல், புவியியல்
மார்ச் 18  வேதியியல், கணக்குப் பதிவியல்
மார்ச் 21  உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிக கணிதம்
மார்ச் 25 தொடர்பு ஆங்கிலம், இந்தியபண்பாடு, கணினி அறிவியல், உயிரி வேதியியல், சிறப்பு மொழிப் பாடம் தட்டச்சு
மார்ச் 27    அரசியல்அறிவியல், நர்சிங், புள்ளியியல், தொழில்பாட எழுத்து தேர்வுகள்



Sunday, November 11, 2012

தீபாவளி நல்வாழ்த்துகள்!





தீபாவளி பண்டிகை ஒரு ஒளித்திருநாளாகும். தீபாவளி என்றாலே உடனே நினைவுக்கு வருவது புத்தாடைகள், புது மகிழ்ச்சி, பலவகைப் பலகாரங்கள், குறிப்பாக - பட்டாசுகளும் மத்தாப்புகளும் தான். 





கூடுமானவரை பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்கலாம். ஏனென்றால், விபத்து அபாயம், அதீத சத்தம், புகை என்று பட்டாசு உண்டாக்கும் கண நேர சந்தோஷத்தைக் காட்டிலும் மோசமான விஷயங்களே அதிகம். அப்படி மீறி பட்டாசு வெடித்துதான் ஆக வேண்டும் என்று நினைத்தால், அதிக அபாயம் இல்லாத பட்டாசு வகைகளைத் தேர்ந்தெடுங்கள். பாதுகாப்பான முறையில் பட்டாசுகளை வெடியுங்கள்!

தீபாவளி நமக்கு சொல்லும் ஒரே விஷயம் இதுதான். மனதில் இருக்கும் இருட்டை விலக்குவதற்கு வெளிச்சம் கொண்டு வருவதுதான் தீபாவளி. மனதில் இருக்கும் அழுக்கை அகற்றி மனதிற்குள் தீபம் ஏற்றுவதுதான் தீபாவளி.



அனைவருக்கும் மகிழ்ச்சியான, பாதுகாப்பான
ஒளிமயமான தீபாவளி நல்வாழ்த்துகள்!

Sunday, August 19, 2012

இனிய ரம்ஜான் நல் வாழ்த்துக்கள்



பசித்திருந்து, தனித்திருந்து, விழித்திருந்து இறைவனை நினைத்திருந்து நோன்பெனும் மாண்பைத் தழுவியிருந்த இஸ்லாமியப் பெருமக்கள் ஈதுல் ஃபித்ர் என்னும் திருநாளைப் பெருநாளாகக் கொண்டாடும் நன்னாள் இன்னாள்.

எந்தச் சுவையும் அருகில் இருந்தாலும் அவற்றை நாடாமல் ஐம்புலன்களையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நோன்பு மனித மனங்களில் புனிதம் பூக்கும் மாண்புடையதாகும். ஏழை எளியவர்க்கு வழங்கிட வேண்டிய ஏழை வரியை உவப்புடன் ஜக்காத் ஆக வழங்கி ஈந்துவக்கும் இன்பம் எய்தும் ஈதுல்' பெருநாள் இந்நாள்.



நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. நோன்பு துறக்கும் போது அவன் மகிழ்ச்சியடைகின்றான். தன் இறைவனைச் சந்திக்கும் போது நோன்பின் காரணமாக அவன் மகிழ்ச்சியடைகின்றான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இறைவனைச் சந்திக்கும் போது நோன்பாளிகள் மகிழ்ச்சியடைவார்கள் என்றால் அவர்கள் மகிழ்ச்சியுறும் விதத்தில் அவர்களை இறைவன் நடத்துவான் என்பது பொருள். மறுமையின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்ட மக்களுக்கு இதை விட வேறு என்ன பாக்கியம் வேண்டும்?

இறைவனுக்காக  இந்த நோன்பு  இருக்க நேர் வழி வாழ பாதை காட்டும் இந்த புனித  மாதத்தின் முடிவில் ரம்ஜான் கொண்டாடும்  அனைவருக்கும் இனிய ரமலான் தின வாழ்த்துக்கள் 


Monday, May 21, 2012

வெற்றி உங்கள் பக்கம்


மே 22-ல் தமிழ்நாடு ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள்

 ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள், மே 22 ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியிடப்படுகிறது.

இதனை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளங்கள் வழியாக பார்க்கலாம்.

·         http://tnresults.nic.in/
·         http://dge1.tn.nic.in
·         http://dge2.tn.nic.in
·         http://dge3.tn.nic.in 




அல்லது முடிவுகளை மொபைல் மூலமும் பெறலாம்.
உங்கள் பதிவு எண்ணையும், பிறந்த தேதியையும் கொடுத்து எஸ்.எம்.எஸ் வழியாக பதிவுசெய்து கொள்ளவும். முடிவுகள் உங்கள் மொபைலுக்கு வந்து சேரும்.

உங்கள் செய்தி இதுபோல் இருக்க வேண்டும்: tnboard12 123456,01/04/1995
செய்தி அனுப்பவேண்டிய எண்:   +919282232585.
இங்கே 123456 என்பது ஆறு இலக்க உங்கள ப்ளஸ் 2 பதிவு எண், 01/04/1995 என்பது பிறந்த தேதி.